வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் விஜய் சேதுபதி.
இவர் முன்னணி ஹீரோவாக அறியப்படும் முன்னர் தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2006 -இல் சன் டிவியில் ஒளிபரப்பான பெண் சீரியலில் நடித்துள்ளார்,
விஜய் சேதுபதி அத்தியாயம் என்ற ஷார்ட் பிலிம்-இல் நடித்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துரு, நீர் போன்ற ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி நடித்த M. குமரன் படத்தில் ஒரு காட்சியில் ஓர் ஓரமாக நிற்பார் விஜய் சேதுபதி.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை படத்தில் தனுஷ்ன் நண்பர்களில் ஒருவராக நடித்தார்.
பிரபு சாலமன் இயக்கிய லீ திரைப்படத்தில் கால் பந்து வீரராக சிறிய ரோலில் தோன்றினார்.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் ஒரு சின்ன சீனில் கபடி வீரராக வருவார்.
நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார் விஜய் சேதுபதி.
பலே பாண்டிய திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் அண்ணனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி
சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
சசிகுமார் நடிப்பில் உருவான சுந்தரபாண்டியன் படத்தில் நெகடிவ் ரோலில் விஜய் சேதுபதி நடித்தது அனைவரும் அறிந்ததே.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு மிகவும் எதார்த்தமான தோற்றத்தில் நடித்த சூது கவ்வும் படம் ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றது.
ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது கமல் ஹாசனுடன் இனைந்து 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார்.