அனபெல் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது

விஜய் சேதுபதி, டாப்சீ பன்னு இனைந்து நடிக்கும் திரைப்படம் அனபெல் சேதுபதி

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தீபக் சுந்தர் ராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்ராஜனின் மகன்.

அனபெல் சேதுபதி ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தேவதர்ஷினி , சுப்பு பஞ்சு மற்றும் மதுமிதா இணைந்து நடிக்கின்றனர்

இந்த படத்திற்கு  முதலில் அனபெல் சுப்பிரமணியம் என பெயரிடப்பட்டது. பின்னர் அனபெல் சேதுபதி என பெயர் மாற்றப்பட்டது.

இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது.

அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17 அன்று  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.