சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் பீஸ்ட்

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால் தேதி ஏதும் குறிப்பிடவில்லை. தமிழ் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டர், கோலமாவு கோகிலா போன்று இல்லாமல்  பீஸ்ட் படம் வித்யாசமான கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது என்று நெல்சன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவித்தது. 

ஆகையால், விஜய் நெல்சன் இனைந்து பணியாற்றும் பீஸ்ட் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.