சேலத்தில் மிகவும் பிரபலமான தெரு கடை சிற்றுண்டி. எளிய முறையில் நமது வீடுகளில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தட்டு வடை | மிளகு தட்டு வடை பீட்ரூட் துருவியது -  1/4 கப் கேரட் துருவியது   -   1/4 கப் வெங்காயம்  - 1 கொத்தமல்லி சிறிதளவு தேவைக்கேற்ப உப்பு எண்ணெய் 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் :

பச்சை சட்னிக்கு தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி இலைகள்  - 1/4 கப் இஞ்சி மிக சிறிய துண்டு பச்சை மிளகாய் - 4 தேங்காய் சிறிய துண்டு தேவைக்கேற்ப உப்பு

சிவப்பு சட்னிக்கு தேவையான பொருட்கள் :

வெங்காயம் -  1 தக்காளி -  1 சிவப்பு மிளகாய் - 4 பூண்டு 1 புளி மிக சிறிய துண்டு தேவைக்கேற்ப உப்பு

கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்கவும்

பச்சை சட்னி செய்முறை:

வாணலியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி,சிவப்பு மிளகாய், பூண்டு மற்றும் புளியையும் சேர்த்து3-4 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.. இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்

சிவப்பு சட்னி செய்முறை:

ஒரு தட்டில் துருவிய பீட்ரூட், கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, வெங்காயத்தை ஒன்றாக கலக்கவும். 

ஒரு தட்டில் தேவையான தட்டு வடையை வைத்து, அதன்மேல் பச்சை சட்னியை தடவவும்

இதன் மேல் பீட்ரூட் கேரட் கலவையை வைக்கவும்.

மற்றொரு தட்டில் தேவையான தட்டு வடையை வைத்து சிவப்பு சட்னியைப் பரப்பி, சாண்ட்விச் போல மேலே மூடவும்.

சுவையான தட்டு வடை செட் ரெடி