அரவிந்த்சாமி, கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படம் திரையரங்கில் வரு‌கிற செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருவதை அடுத்து தலைவி படம் திரையரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

தலைவி படம் திரையரங்கில் வெளியான பின்னர் ஓடிடியில் வெளியாகிறது

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளில் அமேசன் பிரைமிலும் ஹிந்தியில் நெட்ஃபிலிக்ஸ்சிலும், வெளியாக இருக்கிறது

தெய்வத்திருமகள், மதராசபட்டினம், தலைவா போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் தலைவி படத்தை இயக்கி உள்ளார்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தலைவி

ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்

தலைவி படத்திற்காக கங்கனா ரனாவத்  தனது உடல் எடையை  20 கிலோவிற்கு மேல் அதிகரித்து உள்ளார்

தலைவி படத்தின் டிரைலர்  கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது

இப்படத்தில் மதுபாலா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரிஸ் ஏற்கனவே வெளியானது நினைவிருக்கலாம்.