செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் தம்பதியினருக்கு செப். 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது

அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் வைத்துள்ளதாக ஒரு புகைப்படத்துடன் செளந்தர்யா பதிவிட்டிருந்தார்

அதில் அவர் டாக்டர்கள் சுமனா மனோகர் மற்றும் ஸ்ரீவித்யா சேஷாத்ரிக்கும் நன்றி தெரிவித்திருந்தார்

இந்நிலையில் அவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், பலர் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த வண்ணம் இருந்தனர்

எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவையும் ஒரு புகைப்படத்தையும் செளந்தர்யா பதிவிட்டுள்ளார்

அந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பிறந்தநாளை பற்றி பேசுகையில், "இந்த வருடம் கடவுள் எனக்கு சிறந்த பரிசை கொடுத்துள்ளார்"

*வீர் பாப்பா மற்றும் அந்த அற்புதமான கடவுள் என் பின்னே எப்போதும்," என்றார்

அதில் தலைவர் ரஜினிகாந்த் பின்னால் நின்று பார்க்க மகள் செளந்தர்யா வீரை கையில் வைத்திருந்தார்

தாத்தா ரஜினிகாந்திற்கு வீருடன் நான்கு பேரன்கள் இப்போது இருக்கின்றனர்