சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளியான தகவல் அனைவரும் அறிந்ததே.

ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி போன்ற படங்களை இயக்கியுள்ளார் நந்தா பெரியசாமி.

சிம்பு- நந்தா பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியான ‘வாலு’ திரைப்படத்தில் சிம்புவுடன் இனைந்து ஹன்சிகா நடித்தார்

வாலு படத்திற்கு பின்னர் சிம்பு ஹன்சிகா இனைந்து வேட்டை மன்னன் படத்தில் இனைந்து நடித்தனர். இந்த படம் சில காரணத்தால் கைவிடப்பட்டது.

அதன் பிறகு 'மஹா' என்ற திரைப்படத்தில் சிம்பு ஹன்சிகா இனைந்து நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் நிலையில் உள்ளது.

தற்போது சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சக்க போடு போட்டுக்கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவித்து வருகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு நடித்த படம் பெரியளவு வெற்றிபெறவில்லை.

இதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து சிம்பு நடித்த மாநாடு படம் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு அடுத்த படத்தில் ஹன்சிகாவுடன் இணையும் தகவல் ரசிகர்களை ஏககுஷியில் ஆழ்த்தியுள்ளது.

நயன்தாராவுடனான காதல் முறிந்த பிறகு சிம்பு ஹன்சிகாவை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.

நயன்தாரா சிம்பு இருவரும் பிரிந்த பிறகு பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' படத்தில் இனைந்து நடித்தனர்.

சிம்பு நயன்தாரா காதல் முறிவுக்கு பின்னர் இனைந்து நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா… சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு! CLICK HERE

ALSO READ