சந்தானம் அடுத்ததாக 'கிக்' படத்துல பணியாற்றி வருகிறார்

இந்த படத்தை ஃபார்சூன் பிலிம்ஸ் (Fortune Films) தயாரித்து வருகின்றனர்

இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். பிரசாந்த்ராஜ் கன்னடத்தில்  'விசில்', 'ஆரஞ்ச்' போன்ற படங்ளை இயக்கியுள்ளார்

ஆனால் பிரசாந்த்ராஜ்-க்கு இது தான் தமிழில் முதல் படம்

கிக் படத்தில் நாயகியாக , 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் இணைகிறார்

இந்த படத்தில் நடிகர்கள் தம்பி ராமையா, மனோபாலா, வையாபுரி மற்றும் ஷகிலா நடிக்கின்றனர்

இதில் சந்தானம் முதல் முறையாக முன்னணி நடிகர் செந்திலுடன் கைக்கோர்க்கிறார். காசியோ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் செந்தில்

'கிங்'கில் சந்தானமுடன் நடிகர் மன்சூர் அலிகானும் முதல் முறை இணைந்து நடித்துள்ளார். படத்தில் அவர் கனேஷ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

இதில் கோவை சரளா பையர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

படத்தில் முழு நீள நகைச்சுவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

படத்தில் சந்தானம் மற்றும் தான்யா இருவருமே வெவ்வேறு கம்பெனிக்கு வேலை செய்வார்கள் எனவும். எலியும் பூனையும் போல போட்டி போட்டுக் கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது

படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காங்கில் நடந்துள்ளது