ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் மின்சார காருக்கு 'SPECTRE' என பெயரிடப்பட்டுள்ளது.

ஆடம்பர சொகுசு கார்களின் வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார கார் என்ற பெருமையை பெற்றுள்ளது 'Spectre'

மேலும், இது 2023 -ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

இந்த காரை 2.5 மில்லியன் கிலோமீட்டர் தூரம் சோதனைக்கு உட்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

மாறுபட்ட நிலப்பரப்பு, வெப்பநிலை மற்றும் உயரத்தில் சோதனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Spectre எலக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் மற்றும் கோஸ்ட் கார்களை போன்றே பிரத்யேக அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேம் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.

2030- ஆம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மின்சார கார்களை மட்டுமே உற்பத்தி செய்யும் என அறிவித்துள்ளது.

1904-ம் ஆண்டு Charles rolls மற்றும் Henry royce ஆகிய இருவரும் இணைந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை உருவாக்கினர்.

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் போன்ற பெரும் தொழிலதிபர்கள் மற்றும் முன்னணி நடிகர்களிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Boat Tail கடந்த மே மாதத்தில் 200 கோடி மதிப்பிலான உலகின் விலையுர்ந்த காரை அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ்.

Rolls Royce Electric Car Spectre Announcement Details

Boat Tail கார், சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

Rolls Royce Electric Car Spectre Announcement Details

விற்பனையில் புதிய சாதனை படைத்த 'Ola Electric Scooter' CLICK HERE

ALSO READ

A