-ஹைதராபாத்தில் 2021-ம் ஆண்டிற்கான சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரெஜினா கசாண்ட்ரா காட்சியளித்தார்.

சிக்கென்ற உடல் அமைப்பு, கருப்பு நிற உடை அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி' தெலுங்கு ரீ-மேக்கில் அறிமுகமானவர்.

தமிழில் 'கண்ட நாள் முதல்' படம் மூலம் அறிமுகமானார்.

இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், ராஜதந்திரம், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27 ல் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான 'கசட தபர' படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது அரவிந்த் சாமியுடன் இனைந்து 'கள்ளபார்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இனைந்து முகிழ் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், ராஷி கன்னா நடிக்கும் ஹிந்தி வெப் சீரிஸில் இணைந்துள்ளார் ரெஜினா.

மேலும் இவர் சூர்ப்பனகை படத்தில் நடித்து வருகிறார்.

ரெஜினா கசாண்ட்ரா @ சைமா 2021