ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல் நடித்த Macho உள்ளாடை விளம்பரம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளானது.

இந்த விளம்பரத்தில் ராஷ்மிகா மந்தனா ஃபிட்னஸ் கோச்சாக வருகிறார்.

விக்கி கௌஷல் ஃபிட்னஸ் பயிலும் மாணவராக வருகிறார்.

விளம்பரத்தில், தன்னிடம் பயற்சி பெறுபவர்களின் உடலை ஸ்ட்ரெட்ச் செய்ய வைக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

பிறகு 1 , 2 , 3 என கவுண்ட் செய்கிறார் ராஷ்மிகா மந்தனா.

விக்கி கௌஷல் அணிந்திருக்கும் உள்ளாடை ஸ்ட்ரிப் கண்ணில் பட்டவுடன் 3.1, 3.2, 3.3 என கவுண்ட் செய்கிறார்.

இந்த விளம்பரத்தை பற்றி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

இந்த விளம்பரம் சமூகத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் இது ஒரு கீழ்த்தரமான விளம்பரம் என விமர்சித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

புஷ்பா திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

புஷ்பா திரைப்படம் டிசம்பர் 17 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.

இவர் கடந்த மாதம் ஹைதராபாதில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

இவர் டியர் காம்ரேட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.