மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த டீசர் ஆயுத பூஜை அன்று வெளியானது

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

அண்ணாத்த’ படத்தின் டீசர் ஒரே நாளில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

டீசரில் வரும் பஞ்ச் டயலாக் கிராமப்புற மனிதனின் உறுதியையும் வலிமையையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

''இந்த அண்ணாமலையை நண்பனா தான் பாத்திருக்க.. இனிமேல் நீ விரோதியா பாக்க போற..'' இந்த டயலாக்கை நினைவுபடுத்தும் வகையில் அண்ணாத்த படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.

"கிராமத்தான குணமா தான பாத்திருக்க.. கோவ பட்டு பாத்தது இல்லயே" 

 சிவா இயக்கிய வீரம், விசுவாசம் படங்களை போன்று அண்ணாத்த படத்திலும் சில பொதுவான டெம்ப்ளேட் இடம்பெற்றுள்ளது.

வீரம், விசுவாசம் படங்களில் பார்த்தது போல கிராமத்து பின்னணி, வேஷ்டி-சட்டை , அருவா, பஞ்ச் டயலாக் என அண்ணாத்த படத்திலும் இடம்பெற்றுள்ளது.

அண்ணாத்த படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியன் பாடிய அண்ணாத்த 1st சிங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது

Rajinikanth Starrer Annaatthe teaser Review

அதன் பிறகு சாரல் சாரல் காற்றே மற்றும் மருதாணி செவப்பு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது

சமீபத்திய  தகவல்: அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் கணேசன் என தகவல் வெளியாகிவுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கிய வீரம்,  வேதாளம் படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம், கணேஷ் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வரிசையில் அண்ணாத்த படத்தில் ரஜினி பெயரும் கடவுள் விநாயகரை குறிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அண்ணாத்த படத்தில் ரஜினி பெயரும் கடவுள் விநாயகரை குறைக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.