ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் காய்க்கவாட்

இவர் 1975 இல் கனடா இயக்குனரான புட்டண்ணா கனகல் இயக்கிய கதா சங்கமா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்

பின்பு அதே ஆண்டு  கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்

ரஜினிகாந்த், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (MGR Film and Television Institute )நடிப்பில் டிப்ளமோ படித்தவர்.

தமிழ்நாடு அரசு இவருக்கு 1984 இல் கலைமாமணி விருதையும் 1989 இல் எம்.ஜி.ஆர் விருதையும் வழங்கி சிறப்பித்தது

1988 இல் வெளியான பிளட் ஸ்டோன்(blood stone) என்ற ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்

ரஜினிகாந்த்திற்கு மிகவும் பிடித்த நடிகைகள் ஹேமமாலினி மற்றும் ரேகா

ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய அரசிடம் இருந்து பத்மபூஷன் (2000) மற்றும் பத்ம விபூஷன் (2016) விருதுகள் வழங்கப்பட்டன

ரஜினிகாந்தின் விருப்பமான அசைவ உணவு மட்டன் மற்றும் சிக்கன் கிரேவி

ரஜினிகாந்த் 2021 -இல் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார்

ரஜினிகாந்த் 'வள்ளி' மற்றும் 'பாபா' ஆகிய இரண்டு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த மற்றும் விரைவாக வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்த் அவர்களுக்கு 2022 ஜூலை 24ஆம் தேதி  வருமான வரித்துறையினர் விருது வழங்கி கௌரவித்தனர்

1992-ல் வெளியான மன்னன் படத்தில் "அடிக்குது குளிரு" என்ற பாடலை ரஜினிகாந்த் பாடியுள்ளார்

தமிழ் மற்றும் பிறமொழி படங்கள் உட்பட மொத்தம் 180க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்

ரஜினிகாந்திற்கு பிடித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், சில்வஸ்டர் ஸ்டலோன்