ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  விற்பனை செப்டம்பர் 15-ம்  தேதி துவங்கியது

விற்பனை தொடங்கிய இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியை தாண்டியுள்ளதாக  தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Purchase Window' நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பவிஷ் அகர்வால்.

இந்திய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகபடுத்தப்பட்டது 

இது முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரித்ததாகும்.

ஓலா ஸ்1(s1) மற்றும் ஓலா ஸ்1 ப்ரோ(s1 pro) என இரண்டு வேரியண்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அக்டோபர் 2021 முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யவுள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை:  ஸ்1(s1)- Rs 99,999ஸ்1     ப்ரோ(s1 pro)- Rs 129,999 மாநில அரசின் மானியம், பதிவுச் செலவு, இன்ஷூரன்ஸ் இல்லாமல்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சங்கள்:     --ஹில் ஹோல்டு அஸ்சிஸ்ட் (மேடான பகுதியில் நிறுத்தி இருக்கும் வாகனத்தை இயக்குவதற்கு உதவியாக இருக்கும் )

பார்க்கிங் செய்ய வசதியாக ரிவர்ஸ் கியர் உடன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிறது. 

7 இன்ச் டச் ஸ்கிரீன் 3 ஜிபி ரேம் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஓலா ஸ்கூட்டரை மொபைல் ஆப் மூலம் செயல் படுத்த முடியும்

வாய்ஸ் அஸ்சிஸ்ட்(Voice Assist), பில்ட் இன் ஸ்பீக்கர் (Built in Speaker) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ஓலா எஸ்1 மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும். 3 வினாடிகளில் 0-40 கி மீ வேகத்தை எட்டும் மற்றும் ஒரு சார்ஜ்க்கு 150 கி மீ தூரம் வரை பயணிக்கலாம்

ஓலா எஸ் 1 ப்ரோ மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும். 3 வினாடிகளில் 0-40 கி மீ வேகத்தை எட்டும் மற்றும் ஒரு சார்ஜ்க்கு 181 கி மீ தூரம் வரை பயணிக்கலாம்

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 18 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது, 75 கிமீ வரை செல்ல முடியும்.

ஒரு நபர் அருகில் வரும்போது தானாகவே அன்லாக்(unlock ) செய்யும் வசதி உண்டு

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 ஹெல்மெட் வைக்கும் அளவிற்கு இடவசதி (Boot Space) கொடுக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் s1 பத்து கண்கவரும் நிறங்களில் வருகிறது

வெறும் 499 ருபாய் கொடுத்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.