இதய நோய்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்பு மற்றும் மாவுச்சத்துள்ள உணவை அளவோடு உண்ணுதல் நல்லது

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உண்ணும் உப்பின் அளவை விட உட்கொள்ளும் கார்போஹைட்ரெட்டின் அளவு மற்றும் தரத்தை கவனிப்பது முக்கியம்.

இயற்கையாகவே உணவுகளில் சிறிய அளவில் தான் சோடியம் இருக்கும் , ஆனால் உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்தும் போது சேர்க்கப்படுகிற சோடியமின் அளவு பெரும்பாலும் அதிகமாக இருக்கும்.

ஆகவே டின்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்க பட்ட உணவை தவிர்த்தல் அவசியம்.

பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

வாழைப்பழம், பாலக் கீரைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:

-உருளை கிழங்கு -பீட்ரூட் -முளைக்கீரை -வாழைப்பழம் -தக்காளி -ஆரஞ்சு -அவகேடோ