முருங்கை இலை சூப் உடல் சோர்வை நீக்க உதவுகிறது

பலவீனமானவர்கள் முருங்கை இலையில் ரசம் வைத்து குடித்தால் உடல் வலிகள் நீங்குவதோடு உடலுக்கு ஆற்றலையும் தரும்

இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உடல் எதிர்ப்பு சக்தியை வலுப்பெறச் செய்யும்

முருங்கை இலையில் இருக்கும் குளோரோஜெனிக் அமிலம், நாம் உணவு உண்டபின் நமது உடலின் சக்கரை அளவை  சமன்படுத்த உதவும்

முருங்கை கீரை அழற்சி எதிர்ப்பு சைட்டோகைன்களின் உற்பத்தியை அதிகரித்து உடலில் வரும் அலர்ஜியை கட்டுப்படுத்த உதவுகிறது

கெட்ட கொழுப்பின் அளவை  குறைக்கிறது

மலச்சிக்கல் வயிற்று உப்புசம் வாய்வு தொல்லை போன்ற செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு முருங்கை இலை சிறந்த மருந்தாகும்

உடலின் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முருங்கை இலையில் இருக்கின்றன மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் மூலம் அவதிப்படுவோருக்கு இது உதவும்

முருங்கை இலையின் இருக்கும் இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது

முருங்கை கீரையை அளவுடன் எடுத்து கொள்ளவேண்டும், இல்லையெனில் வயிற்றுப்போக்கு ஏற்படும்

வீட்டில் அடை செய்யும் போது வெங்காயத்துடன் முருங்கை இலையும் சேர்த்த செய்யலாம்

வரமிளகாய், பெருங்காயம், வெங்காயம் போட்டு தாளித்து, இதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கவும் , இவை வதங்கியடன் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து பொரியலாக செய்யலாம்

முருங்கை கீரை பொரியல்

 சீரகத்தை தாளித்து இதனுடன் சிறிது நசுக்கிய பூண்டு மற்றும் நான்கு சிறு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இவை பொன்னிறமாக வதங்கிய உடன் நறுக்கி வைத்த ஒரு சிறு தக்காளியை சேர்க்கவும்.  தக்காளியின் பச்சை வாசனை போனவுடன் ஒரு கப் முருங்கை இலை மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்

 முருங்கை கீரை சூப்:

முருங்கை இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் வைக்கலாம்