மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் ஞாயிறு  (17-10-2021) அன்று காலமானார்.

 இவருக்கு வயது 40 . கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உமா மகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.

உமா மகேஸ்வரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நோயால் தான் அவர் இறந்துள்ளார் என கூறப்படுகிறது.

திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருந்தார் உமா மகேஸ்வரி

மெட்டி ஒலி சீரியல் 2002-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை சன்டிவியில் ஒளிபரப்பானது.

தற்போது சன்டிவியில் மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பாகி வருகிறது. 

உமா மகேஸ்வரி கால்நடை மருத்துவரான முருகனை திருமணம் செய்து கொண்டார். 

மெட்டி ஒலி சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்த வனஜாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.

இவர் மெட்டி ஒலி தவிர 'மஞ்சள் மகிமை', 'ஒரு கதையின் கதை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் மெட்டி ஒலி தவிர 'மஞ்சள் மகிமை', 'ஒரு கதையின் கதை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் வெற்றி கொடி கட்டு, உன்னை நினைத்து போன்ற படங்களிலும் நடித்துள்ளார் உமா மகேஸ்வரி.

பார்கவி  நிலையம் என்ற மலையாள படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது மறைவு சின்னத்திரையுலகினர் மற்றும் இவரது ரசர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர் விஜயராஜ் 2018-ஆம் ஆண்டு 40 வயதில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Metti Oli Fame Uma Maheswari Died at 40, Know about her Unkown Facts

Metti Oli Fame Uma Maheswari Died at 40, Know about her Unkown Facts