செப்டம்பர் மாதத்தில் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்களின் வரிசையை இங்கு காணலாம்

விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் இனைந்து நடித்துள்ள 'லாபம்' படம் வருகிற செப்டம்பர் 9 -ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கில் வெளியாகிறது.

லாபம்- செப் 9

துக்ளக் தர்பார்- செப் 10

விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படம் நேரடியாக சன் டிவியில் செப்டம்பர் 10-ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் ராஷி கண்ணா, சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர், மேலும்  செப்டம்பர் 11-ம் தேதி நெட்ப்ளிக்ஸ்- இல் வெளியாகவுள்ளது.

செப்டம்பர் 9 மற்றும் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10 என அடுத்தடுத்த தேதியில் விஜய்சேதுபதியின் படங்கள் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான 'தலைவி' செப்டம்பர் 10 -ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.  

தலைவி - செப் 10

டிக்கிலோனா - செப் 10

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படம் செப் 10 விநாயகர் சதுர்த்தி அன்று ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

விஜய்சேதுபதி, டாப்சீ பன்னு நடிப்பில் 'அனபெல் சேதுபதி' படம் வருகிற செப்டம்பர் 17 -ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

அனபெல் சேதுபதி- செப் 17