உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் இதயம் சார்ந்த குறைபாடு ஏற்படும். கொலஸ்டிரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை இங்கு காணலாம்.
தினமும் 1/2 முதல் 1 பூண்டு பல் உட்கொண்டால் உடலில் கொலஸ்டிரால் அளவு 9 சதவீதம் வரை குறையும்.
இதில் பெருமளவு பாலிபெனால்கள் உள்ளன. எல்டிஎல் கொலஸ்டிராலை குறைப்பதில் கிரீன் டீ பெரும் பங்கு வகிக்கிறது.
இதில் போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது.
இதில் செரிமானம் ஆகக்கூடிய பைபர் நிறைந்துள்ளது. அன்றாட உணவில் 1 முதல் 2 ஸ்பூன் இசப்கோலை சேர்த்து கொண்டால் உடலின் கொலஸ்டிரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
வெந்தயத்தில் உள்ள சபோனின்கள் உடலில் கொலஸ்டிராலை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. தினமும் 1/2 முதல் 1 ஸ்பூன் அளவு வெந்தயம் உட்கொள்வது உடலில் நல்ல பலனை ஏற்படுத்தும்.
தினமும் நெல்லிக்காய் உட்கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.