உலகளவில் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவைரஸ் பல சினிமா பிரபலங்களை நம்மிடம் இருந்து பிரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த நடிகர்களின் பட்டியலை காண்போம்.

புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் மே 06-2021 இல் காலமானார். இவருக்கு வயது 74

நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா வைரஸ் காரணமாக 2021 மே 09 ஆம் தேதி உயிரிழந்தார்

சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் கோவிட் 19 பாதிப்பின் காரணாமாக கடந்த 2021 மே 14 ஆம் தேதி மரணமடைந்தார்.

திருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து வந்த நடிகர் வெங்கட் சுபா கொரோனா பாதிப்பின் காரணாமாக கடந்த மே-29 இல் காலமானார்.

புதுப்பேட்டை, அசுரன் போன்ற படங்களில் நடித்த நிதிஷ் வீரா கொரோனா வைரஸ் தாக்கியதால் 45 வயதில் உயிரிழந்தார்.

நடிகர் புளோரன்ட் பெரேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 14  இல் மரணமடைந்தார். இவருக்கு வயது 67.

நகுல், சுனைனா நடிப்பில் வெளியான மாசிலாமணி படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர் RNR மனோகர் கொரோனா பாதிப்பின் காரணாமாக 61 வயதில் காலமானர்.

கொரோனா தொற்று காரணமாக பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். 

இவரது மரணம் ரசிகர்கள் மனதில் நீங்க துயரத்தை ஏற்படுத்தியது.

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் கொரோனா நோயால் தனது 54 வயதில் உயிரிழந்தார்.