18 வயசுல போட்ட ஜீன்ஸ்.. இப்பவும் ஃபிட்டா இருக்கு.. குஷ்பு வெளியிட்ட பளீச் போட்டோ

கொரோனா லாக்டவுன் சமயத்தில் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் குஷ்பு.

தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.  

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தார்.

இது ரசிகர்களிடேயே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், குஷ்பு ஜீன்ஸ் அணிந்திருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

18 வருடங்களுக்கு முன்பு அணிந்த ஜீன்ஸ் தற்போது சரியாக பொருந்துவதாக பதிவிட்டுள்ளார்.

வாவ், சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

குஷ்புவுக்கு 50 வயது ஆகிறது. ஆனாலும் உடல் எடையை குறைத்து இளமையுடன் இருக்கிறார்.