குஷ்பு கலர்ஸ் தமிழில் வெளியாகும் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2-ல் பிருந்தா மாஸ்டருடன்  இனைந்து நடுவராக பங்கேற்கிறார்

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  'Behind the Scene' புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

அதில்,  Dance vs Dance S2 கலர்ஸ் தமிழில் மிக விரைவில் என பதிவிட்டுள்ளார்..

மேலும் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு 'மண்டை மேலே கொண்டே' என பதிவிட்டுள்ளார் குஷ்பு

சில வாரங்களுக்கு முன் டான்ஸ் vsடான்ஸ் சீசன் 2 ப்ரோமோ வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் Vs டான்ஸ் 2 செப்டம்பர் நடுவில் ஒளிபரப்பப்படலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,  அழகிய தமிழ் மகன், ஜோடி நம்பர் ஒன்-சீசன் 5 மற்றும் மானாட மயிலாட சீசன் 3, 5 மற்றும் சீசன் 7,8-ல் குஷ்பு நடுவராக இருந்தார்.

சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையை 14 கிலோ வரை குறைத்துள்ளார்.

உடல் எடையை குறைத்த பின் எடுத்த புகைப்பபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.