கடக்நாத் கோழி.. நம்ம ஊரில் கருங்கோழி என்று அழைக்கபடும் இது மத்யபிரதேசத்தை பூர்விகமாக கொண்டது.

இதன் இறைச்சி, முட்டை, எலும்பு என அனைத்துமே கருமை நிறத்தில் காணப்படுகின்றது.

மற்ற நாட்டுக்கோழிகளை காட்டிலும் கடக்நாத் கோழியில் புரத சத்து, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் அதிகம்.

கடக்நாத் கோழி, கிலோ 900 வரை விற்கப்படுகிறது. இந்த கோழி வளர்வதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதால் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.

பிராய்லர் கோழி வெறும் 45 நாட்கிளில் 2.5 கிலோ வளர்ச்சி அடைந்துவிடும், ஆனால் கடக்நாத் கோழி 1.5 கிலோ வளர ஆறு மாத காலம் ஆகும்.

பிராய்லர் கோழியை ஒப்பிடும் போது இதில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு.

இந்த கோழி மற்ற  நாட்டுக்கோழிகளை போல அடை காப்பது இல்லை. மற்றும் முட்டையின் கருவுறுதல் வீதமும் மிகக் குறைவு.

கடக்நாத் கோழியின் மருத்துவ குணங்கள்:

குட்டம், சிரங்கு, வாதம் போன்ற நோய்கள் கருங்கோழியின் இறைச்சியால் குணமாகும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது

முற்காலத்தில் கருங்கோழியுடன் பிற மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மருந்து மூலம், வாயு போன்ற பல நோய்களை குணப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன்  முட்டையை சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

கருங்கோழியின் மருத்துவ நன்மைகள் பற்றி எந்த ஒரு மருத்துவ துறையும் அதிகாரப்பூர்வமாக  வெளியிடவில்லை.

இருப்பினும் ஸ்டெராய்டு ஊசி மூலம் வளர்க்கப்படும் பிரொய்லெரை ஒப்பிடும்போது இயற்கையான சூழலில் வளரும் நாட்டுக்கோழி, கருங்கோழியை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது.