எளிமையான முறையில் பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: *துருவிய பீட்ரூட் - 1கப் *காச்சின பால் - 1 /2 கப் *சர்க்கரை - 1 /2 கப் *நெய் - 1 /4 கப் *ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் *பாதாம், முந்திரி - சிறிதளவு

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றவும்.

நெய் காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில்  பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

பின்னர் அதில் பால் சேர்த்து, பீட்ரூட்டை நன்கு வேக வைக்கவும். 

பால் சுண்டினவுடன்,அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் .

கிளறும் போது அடிப்பிடிக்காமல் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்க்கவும்.

 அல்வா பதத்திற்கு வரும்வரை அடிப்பிடிக்காமல் கிளறி விட வேண்டும்

அல்வா பதம் வந்தவுடன், நெய்யில் பொரித்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.

 சுவையான பீட்ரூட் அல்வா ரெடி !!