மிகவும் எளிதான முறையில் செய்யக்கூடிய ஒரு சிக்கன் ரெசிபி குளிர் மற்றும் மழை காலங்களுக்கேற்ற பெப்பர் சிக்கன் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:  சிக்கன் - 1 /2  kg பெரிய வெங்காயம்-2 தக்காளி (medium) - 1 இஞ்சி பூண்டு விழுது -  2  தேக்கரண்டி பச்சை மிளகாய்-2 சிறிதளவு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி தேவைக்கேற்ப உப்பு

           மிளகு மசாலா தேவையான பொருட்கள்: மிளகு- 3 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் -   1 தேக்கரண்டி வரமிளகாய் 2

 மிளகு மசாலா செய்யும் முறை: மிளகு,சோம்பு,சீரகம்,வர மிளகாய் சேர்த்து வாணலியில் நன்கு வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் 

டுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு பட்டை மூன்று கிராம்பு, பிரியாணி இலை  மற்றும்  2  பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து  பொன்னிறமாக வதக்கவும்

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

பச்சை வாசனை போனவுடன் அரைத்த வாய்த்த தக்காளியை சேர்த்து வதக்கவும்

இவை நன்கு வதங்கியவுடன் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை இதனுடன் சேர்த்து பிரட்டவும்

மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்த மிளகு மசாலா பொடியை இதனுடன் சேர்க்கவும்

தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்

சிக்கன் நன்கு மிருதுவாக வேகும்வரை  அடுப்பை சிம்மில் வைத்து வாணலியை மூடி சமைக்கவும். 

இடையிடையே அவ்வப்போது கிளறிவிடவும் , சுமார் 8-10 நிமிடங்களில் சிக்கன் வெந்துவிடும் , இறுதியில் கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும் . 

காரசாரமான பெப்பர் சிக்கன் ரெடி!