தயிர் பழங்கள் பழங்களில் இருக்கும் அமிலம் தயிரில் இருக்கும்  புரதத்துடன் சேர்வதால் நஞ்சுத் தன்மை ஏற்பட்டு ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்

கோலா மற்றும் பீட்சா பீட்சாவில் இருக்கும் அதிக ஸ்டார்ச் மற்றும் புரோட்டீன்கள் செரிமானத்தை மந்தமாக்கும் . இதனுடன் கோலாவில் இருக்கும் சர்க்கரை சேருவதால் செரிமானத்தை மேலும் மந்தமாக்கிறது

  பர்கர் மற்றும் பிரைஸ்  இவை இரண்டும் நன்கு வருத்த உணவுப் பொருட்கள் ஆகையினால் இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை மிகவும் குறைக்கும் சோர்வடையச் செய்யும்

மதுவுடன் இனிப்புகள் ஆல்கஹால் சர்க்கரையை நிறைவுற்ற கொழுப்புகளாக மாற்ற முயலும் இதனால் நம் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்

உணவுடன் தண்ணீர்  உணவை ஜீரணிக்க தேவையான வயிற்று அமிலங்களை தண்ணீர் நீர்த்துப் போக செய்கிறது இதனால் வயிறு கடினமாகி மேலும் உணவு ஜீரணிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது

ஏரேட்டட் பானங்கள் மற்றும் புதினா  இவை இரண்டையும் ஒன்றாக உண்ணும்போது வீக்கம் மற்றும் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும்

மட்டன் கறியுடன் உருளைக்கிழங்கு பிரைஸ் இவை இரண்டிலும் நார்ச்சத்து இல்லாததால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்

ஜூஸ் மற்றும் கோதுமை ரவை இவை இரத்தச் சர்க்கரையின் அளவை உடனடியாக ஏற்றமடைய செய்து பின்பு குறுகிய நேரத்தில் வீழ்ச்சி அடைய செய்கிறது இத்தகைய இரத்தச் சக்கரையின் உடனடி ஏற்றத்தாழ்வு உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல

முட்டை மற்றும் வறுத்த இறைச்சி இந்தக் கலவையில் புரதம் அதிகம் உள்ளதால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் செரிமானத்தை பாதிக்கும்

மட்டன் மற்றும் இறால்  இவை செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

வாழைப்பழம் மற்றும் பால் இவை செரிமானத்தை மந்தமாக்கும்

சீஸ் மற்றும் பீன்ஸ் வயிறு உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை ஏற்படும்

ஜூஸ் மற்றும் தானியங்கள் பழச்சாறுகளில் உள்ள அமிலங்கள் என்சைமின் செயல்பாட்டை பாதிப்பதன் மூலம் தானியங்களில் இருக்கும் கார்போஹைட்ரேடுகளை உடைப்பதை தடுக்கின்றன

நட்ஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் உணவு செரிமானத்தை பாதிக்கும்

உணவுக்குப் பிறகு பழங்கள்  பழங்கள் சீக்கிரமாக ஜீரணமாக கூடியவை ஆனால் உணவில் இருக்கும் கொழுப்புகள்,புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பழத்தில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரம் வயிற்றில் இருப்பதால் புளிப்புத்தன்மை ஏற்பட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தும்