கலப்படமற்ற கோடையின் சிறந்த குளிர் பானம் இளநீர் , அதை  அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி காணலாம்

இளநீரில் உள்ள சைட்டோகினின்கள் புற்றுநோயை எதிர்க்கும் தன்மைக்கொண்டுள்ளது.

இளநீரில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரைப்பை ரிஃப்ளக்ஸ்யை குறைக்கிறது

இளநீரில்  உள்ள பொட்டாசியம், சோடியத்தின்  செயல்திறனை கட்டுப்படுத்தி உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

 இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரஸ் பண்புகள் நம்  உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுசேய்து , காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது

இளநீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்கள் நம் உடம்பில் இருக்கும் கொலஸ்ட்ராலையும் டிரைகிளிசரைடுகளையும் குறைக்கும் பண்பு கொண்டது, இத்தகைய தன்மை ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும்.

உடலின் நீர்ச்சத்து பற்றாக்குறைக்கு இதுவே சிறந்த பானம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது இதில் கலோரிகள் குறைவாக இருக்கிறது மேலும் வயிறு நிறைந்து  திருப்தியடைய செய்து பசியை கட்டுப்படுத்துகிறது.

அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இளநீர் இரத்தத்தில் சக்கரையின் அளவை சீராக்க உதவுகிறது

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. சிறுநீரில் படிகங்களை (crystals)  உருவாக்கும்  தாதுக்களை குறைக்கிறது

வறண்ட மற்றும் சென்சிடிவ்  சருமத்திற்கு  தேவையான நீர்ச்சத்தை அளித்து ஊட்டமளிக்கிறது

 முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவும் ஆண்டி-மைக்ரோபியல் பண்புகள் இளநீரில் இருக்கிறது

மது அருந்துவதால் ஏற்படும் ஹேங்ஓவர் மற்றும் நீரிழப்பை சரிசெய்ய உதவுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படும் வைட்டமின C மற்றும் B இளநீரின் இருப்பதால்,  இவை சருமத்தில் ஏற்படும் சிறிய திசு சேதங்கள் மற்றும் தழும்புகளை அகற்ற உதவுகிறது மேலும் இதில் இருக்கும் சைட்டோ சைகைகள்  புரதம் நம் தோலின்  முதுமை அறிகுறிகளைக் குறைக்கின்றன

இளநீரில்  இருக்கும் அர்ஜினைன்  நம் உடலின் உள் உறுப்புகள் அனைத்திற்கும்  இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.