நம்மில் பலருக்கு பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட ஜூஸாக அருந்திட பிடிக்கும் . பழச்சாறுகளின் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்
உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவுகிறது
பழச்சாற்றில் அதிக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது
உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது
சிறுநீரக கற்கள் வராமல் இருக்க பழச்சாறுகள் அருந்த வேண்டும்.
ஜூஸில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிக அளவில் உள்ளன. 240 மில்லி ஆரஞ்சு ஜூஸில் நமக்கு நாள் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட 67% வைட்டமின் C உள்ளது, அதுமட்டுமின்றி போலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்களும் உள்ளன
பழசாறு உடலின் கழிவுகளை நீக்குவதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
ஆரஞ்சு ஜூஸ் , கேரட் சாறு , மாதுளை ஜூஸ் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைத்துள்ளதால், அவை புற்றுநோயை தடுக்க உதவுகின்றன.
சருமத்தின் பொலிவுக்கும் ஆரோக்கியத்திற்கும் பழச்சாறுகள் அருந்த வேண்டும் இவை முகத்தை பளபளப்பாக மாற்றும்
சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகளில் கலோரிகள் குறைவாக இருக்கும்.
நீரழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பழச்சாறுகளை அருந்தவும்
பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சம்பழம் அல்லது தேன் கலந்து பருகினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
எலுமிச்சை, சாத்துக்கொடி, திராட்சை போன்றவற்றை அப்படியே பச்சையாகச் சாப்பிடுவதை விட ஜூஸாக பருகினால் சுவையும் கூடும் அதிக அளவும் உட்கொள்ள முடியும்.
செயற்கை சுவையூட்டிகள் உடன் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்களை ஒப்பிடுகையில் நாமே தயாரிக்கும் பழச்சாறுகளில் நன்மைகள் அதிகம்