"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்". - அகத்தியர் குணபாடம்     

தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்த அகத்திய சித்தர் கூறிய மூலிகையை தயார் செய்யும் முறையை பற்றி காண்போம்

தேவையான பொருட்கள்: கரிசலாங்கண்ணி இலை குன்றிமணி நல்லெண்ணெய் அளவு: 4:2:1   (4 கப் கரிசலாங்கண்ணி சாறு எடுத்துக்கொண்டால் 2 கப் குன்றிமணி மற்றும் 1 கப் நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை: கரிசலாங்கண்ணி இலையை மிக சிறிய அளவு தண்ணீர் விட்டு அரைத்து துணையால் வடிகட்டி கொள்ளவும்

குன்றிமணியை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் நர நர(coarse) என்று அரைத்து கொள்ளவும்.

அரைத்த குன்றிமணியை ஒரு காட்டன் துணியில் முடிந்து வைக்கவும்.

 காட்டன் துணியில் முடிந்து வைத்த குன்றிமணியை அரை லிட்டர் பாலில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்படி செய்தால் குன்றிமணி பருப்பில் உள்ள நச்ச்சுத்தன்மை பாலில் கரைந்துவிடும்.

பின்னர் இரும்பு கடாய்யை  அடுப்பில் வைத்து நல்லெண்ணெய், கரிசலாங்கண்ணி சாறு மற்றும் குன்றிமணி பருப்பை சேர்த்து கொள்ளவும்.

ஒரு கொதி வரும் வரைக்கும் அடுப்பை அதிக தீ-யில் வைக்கவும். கொதி வந்த பிறகு அடுப்பை மிதமான தீ-யில் வைக்கவும்.

அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கலக்கி விடவும். எண்ணெய்யில்  உள்ள நீர்சத்து  ஆவியாகி சத்தம் அடங்கிய பின்னர் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் காய்த்து வைத்த கலவையை மெலிசான காட்டன் துணியில் கொட்டி நன்கு பிழிந்து வடிகட்டி எண்ணெய்யை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இந்த எண்ணெய்யை தினமும் தடவிவர தலை முடி நன்கு வளரும் என்று அகத்தியர் குணபாடத்தில் கூறியுள்ளார்.

பின்குறிப்பு: குன்றிமணி பருப்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அமேசான் போன்ற  ஆன்லைன் விற்பனை தளங்களிலும் கிடைக்கிறது.

பின்குறிப்பு: கரிசலாங்கண்ணி இலை கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கரிசலாங்கண்ணி பவுடர் வாங்கி பயன்படுத்தலாம்.