இந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அணைத்து பொறியாளர்களுக்கும் “இனிய பொறியாளர் தின” வாழ்த்துக்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் வல்லுனர் சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர் எம்.வி 15 செப்டம்பர் 1860 இல், கர்நாடகா மாநிலத்தில் முத்தநஹள்ளி, சிக்கபல்லபுரா என்னும் கிராமத்தில் பிறந்தவர்.

இந்தியாவின் மிகச் சிறந்த சிவில் இன்ஜினியர், பொருளாதார நிபுணர் மற்றும் அணை கட்டுபவர் என்று அழைக்கப்படுகிறார். 

20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான பில்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இந்தியாவில் அணைகள் மற்றும் நீர் அமைப்புகளை உருவாக்கியவர்.

1912 முதல் 1918 வரை மைசூர் திவானாக இருந்த காலத்தில், அவர் மைசூரை ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாக்கினார்.

தொழில்துறை, பொருளாதார மற்றும் சமூக திட்டங்களில் ஏராளமான பங்களிப்புகளுக்காக சர் எம்.வி “நவீன மைசூரின் தந்தை” என்று அழைக்கப்பட்டார்.

விஸ்வேஸ்வரய்யாவின் சாதனைகள்:

மைசூரில் புகழ்பெற்ற கிருஷ்ண ராஜா சாகரா அணையின் தலைமை பொறியாளராக சர் எம்.வி இருந்தார்.

விஸ்வேஸ்வரய்யாவின் சாதனைகள்:

சர் எம்.வி, தானியங்கி வெள்ளமடை மதகை கண்டுபிடித்தார். அதவாது வெள்ள நீர் அதிகரிக்கும்போது தானாக மடை திறந்து வெள்ளத்தை கட்டுப்படுத்தும் அமைப்பு.

விஸ்வேஸ்வரய்யாவின் சாதனைகள்:

பெங்களூரு அரசு பொறியியல் கல்லூரி சர் எம்.வி அவர்களால் நிறுவப்பட்டது, இது கர்நாடகாவில் அமையப்பெற்ற முதல் பொறியியல் கல்லூரி ஆகும்

பின்னர் அவரது நினைவாக University Visvesvaraya College of Engineering (UVCE) பெயரிடப்பட்டது.

இவரது எண்ணற்ற பணிக்காக 1955 ஆம் ஆண்டில், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

1915 ஆம் ஆண்டில் , கிங் ஜார்ஜ் 5 அவர்களால் விஸ்வேஸ்வரய்யாவிற்கு பிரிட்டிஷ் நைட்ஹூட் ( kighthood ) என்ற பட்டம் வழங்கப்பட்டது.