EBikeGo நிறுவனம் முரட்டுத்தனமான வடிவம் கொண்ட Rugged எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பூம் மோட்டார்ஸ் உடன் இனைந்து கோயம்புத்தூரில் Rugged எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயார் செய்கிறது EBikeGo நிறுவனம்.
இந்த பைக் G1 மற்றும் G1+ என இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது.
விலை: G1 வேரியண்ட்- ரூ. 79,999 G1+ வேரியண்ட்- ரூ. 99,999 (மாநில அரசின் மானியம் இல்லாமல் )
நவம்பர் 2021 முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யவுள்ளதாக இ-பைக் கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Rugged எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 KW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
இந்த ஸ்கூட்டர் இரண்டு 2 KWh பேட்டரியுடன் (swappable battery) வருகிறது. வாகனத்தை ஆஃப் செய்யாமலேயே பேட்டரியை ரீபிளேஸ் செய்யும் வசதி உள்ளது கூடுதல் சிறப்பு.
பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
இதர சிறப்பம்சம்: -12 இன்பில்ட் சென்சார் -Rugged மொபைல் ஆப் மூலம் வாகனத்தை அன்லாக் செய்யும் வசதி -ஆன்டி தெஃப்ட்(Anti theft) வசதி -IoT டெக்னாலஜி
Rugged எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைக்கு தகுந்தது போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று EBikeGo கோ நிறுவனர் இர்பான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்கூட்டர் கிரேடில் சேஸிஸ் மற்றும் ஸ்டீல் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சேஸிஸ் 7 வருட வாரன்டியுடன் வருகிறது .
வெறும் 499 ருபாய் முன்பணமாக கட்டி இந்த வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Rugged ஸ்கூட்டர் ஓலாவை காட்டிலும் குறைந்த விலையில் வருகிறது. G1 வேரியண்ட்- ரூ. 79,999 G1+ வேரியண்ட்- ரூ. 99,999 ஓலா ஸ்1(s1)- ரூ. 99,999 ஓலா ஸ்1 ப்ரோ(s1 pro)- ரூ. 129,999
இது நிச்சியம் ஓலாவுக்கு போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.