தோசை கல்லில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்
* மீன் - 8 துண்டுகள் * மஞ்சள் தூள் சிறிதளவு * இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி * மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி * கார்ன் பிலௌர் மாவு - 1 /2 தேக்கரண்டி * சிறிதளவு புளி * தேவையான அளவு உப்பு
மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கார்ன் பிலௌர் மாவு மற்றும் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும்
இதனுடன் கரைத்து வைத்த புளித் தண்ணீர் 2 தேக்கரண்டி மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் மீன் மசாலாவை தயார் செய்யவும்
கழுவிய மீன் துண்டுகளை மசாலா கலவையில் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்
மசாலா பிரட்டிய மீன் துண்டுகளை வெயிலில் சிறிது நேரம் உலர விட வேண்டும் அல்லது 30-60 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சுவையான மீன் வறுவல் ரெடி...