சங்கு பூ டீ-யின் பலன்கள் மற்றும் செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது

சங்கு பூ  டீ ( Blue Tea)  மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது

சங்கு பூ டீ-ல் காஃபின், கார்போஹைட்ரேட்டுகள்,  கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை இல்லாததால் இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த மூலிகை பானமாகும்கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி செரிமானத்தை எளிதாக்குகிறது

இளமையை தக்க வைக்க உதவுகிறது. சங்கு பூ (Butterfly Pea Flower)  டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் (flavonoids ) கொலாஜன் (collagen ) உற்பத்தியைத் தூண்டி, சருமத்தின் எலாஸ்டிசிடியை  மேம்படுத்த உதவுகின்றன.

ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளூ டீயை தொடர்ந்து குடிப்பதால், செரிமானமடையாத உணவு கழிவுகளை நீக்குவதோடு, வயிறு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்கிறது.

இதில் இருக்கும் அந்தோசயனின் (anthocyanin ) தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து , முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது  மேலும் மயிர்க்கால்களை வலுப்பெற செய்கிறது.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,தினமும் ஒரு கப் சூடான சங்குப்பூ டீ  பருகினால், அவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது.

இது தீங்கு விளைவிக்கும் ட்ரைகிளிசரைடு மற்றும் கெட்ட LDL கொழுப்பினைக் குறைக்கிறது, அதே சமயத்தில் நல்ல HDL கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

கண்பார்வைக்கு  நல்லது

சங்கு பூ டீ ( Blue Tea )செய்யும் முறை : அடுப்பில் பாத்திரத்தை வைத்து 250 ml தண்ணீர் ஊற்றவும் அதில் 4 -5 சங்குப்பூ போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். சங்கு பூவின்  சாறு நன்கு தண்ணீரில் இறங்கி தண்ணீர்  நீல நிறமாக மாறும்.

அடுப்பை அணைத்து சங்குப்பூ டீயை டம்ளரில் வடிகட்டி  தேவைக்கேற்ப தேன் கலந்து பருகவும்

இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம். சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தவுடன் purple நிறமாக மாறும் மேலும் இரண்டு சொட்டு சேர்த்தால் பின்க் (pink)  கலராக மாறிவிடும்

கோல்ட் டீ ( cold Tea ) விரும்புபவர்கள், இந்த டீ சூடு ஆறியவுடன் தேவைக்கேற்ப ஐஸ் கியூப் கலந்து பருகலாம்

டீ கொதிக்கும் போது சிறிது இஞ்சி மற்றும் பட்டை சேர்த்து மசாலா டீ-யாகவும் பருகலாம்

 பின்குறிப்பு:  சங்கு பூவை நன்கு நிழலில் காயவைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டும் உபயோகிக்கலாம்