வாழைத்தண்டில் அதிக நார்சத்து நிறைந்துள்ளது. இது ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது உடல் எடையை குறைக்கவும் மற்றும் பல வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது

வாழைத்தண்டின் மருத்துவ பயன்கள் பற்றி அடுத்தடுத்த பக்கத்தில் காணலாம்

வாரம் ஒருமுறை வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொண்டால்  பித்தப்பை கல் குணமாகும்.

சிறுநீரக கல் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து வாழைத்தண்டு ஜூஸ்

வாழைத்தண்டு சாறுடன்  1 /2  எலுமிச்சை ஜூஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக கல் குணமாகும்.

உடல் எடை குறைக்க விரும்புவார்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்து கொள்ளலாம்

வாழைத்தண்டு சிறுநீரக பாதை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரிச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

வாழைத்தண்டில் அதிக நார்சத்து உள்ளதால் மலசிக்கல் பிரிச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.

வாழைத்தண்டில் வைட்டமின் பி-6 மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

வாழைத்தண்டு ஜூஸ் நம் உடலில் தங்கி உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. வாழைத்தண்டு ஜூஸ் இரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வாழைத்தண்டை சுத்தம் செய்ய நேரம் எடுத்துக்கொள்வதால் இன்றைய தலைமுறையினர் சமையலில் இதை தவிர்த்து வருகின்றனர் என்பது வேதனை.