வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காணலாம்

தொற்றுநோய்களைத் தடுக்கிறது. வாழைப்பூ சாற்றில் உள்ள எத்தனால் நோய்க்கிருமி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது

சமைத்த வாழைப்பூவை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு குறையும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை கட்டுப்படுத்த வாழைப்பூ சிறந்த உணவு.

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது வாழைப்பூ. ரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்க உதவும்

வாழைப்பூவில் பினாலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் போன்ற  ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன

வாழைப்பூ பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது

பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் இரத்தப்போக்கை குறைக்கிறது.

 வாழைப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இது வயோதிகத்தை கட்டுப்படுத்தி இளமையாகை இருக்க உதவுகிறது.

சிறுநீரகத்தின்  செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது.

வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சாறு பிழிந்து மோருடன் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் வரை தொடர்ந்து குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குறையும்

இரத்த மூலநோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்

வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கடைந்து சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.

பெண்கள் வாழைபூவின் நுனி தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை வலுபெறும்.