தீபாவளி அன்று உலகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியானது.

படம் வெளியான முதல் நாளில்  இருந்தே வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது அண்ணாத்த

முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷனில்  தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூலித்து உள்ளது.

தமிழ்நாட்டில் 32 கோடி கலேக்‌ஷன் உடன் முதல் இடத்தில் இருந்த விஜய்யின்  சர்கார் படத்தை முந்தியுள்ளது அண்ணாத்த.

அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் 2021-ல் அதிக வசூல் செய்த தமிழ் படம் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது அண்ணாத்த. இரண்டாம் இடத்தில் 'டாக்டர்' படமும், மூன்றாவது இடத்தில் 'மாஸ்டர்' படமும் உள்ளது.

அண்ணாத்த படம் வெளிநாடுகளில் (Excluding UK & Europe) ஒரே ஷோவில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.

அண்ணாத்த திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 53 இடங்களில் மட்டும் சுமார் 63 லட்சம் வசூலித்துள்ளது.

அண்ணாத்த திரைப்படம் மாஸ்சாக உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஆனால் பெரும்பாலானோர் படம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லையென்று விமர்சித்து வருகின்றனர்.

அண்ணாத்த திரைப்படத்தை கலாய்த்து நிறைய மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.