நாள்தோறும் திராட்சை சாறு பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இதயத்துடிப்பை சீர் படுத்த இதய வலியை கட்டுப்படுத்த திராட்சைப்பழம் உதவுகிறது

பல் ஈறுகளில் இரத்தக் கசிவு உள்ளவர்கள் தினமும் திராட்சை ரசம் அருந்தினால் குணமாகும்

மலச்சிக்கல் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் திராட்சைப் பழச்சாறு குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்

சிறுநீரகம் தொடர்பான நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் திராட்சை பழத்திற்கு உண்டு

உடல் பலவீனத்தை போக்க உதவும்

திராட்சையில் இருக்கும் குளுக்கோஸ் ரத்தத்தில் உடனடியாக கலந்து விரைவில் புத்துணர்வு கிடைக்க வழி செய்கிறது

திராட்சை, நம் உடலில் அதிக அளவு இரத்தம் உற்பத்தி செய்ய உதவுகிறது

திராட்சை பழத்தில் இருந்து கிடைக்கும் இரெசுவரட்ரால் என்ற சத்துப்பொருள், பெருங்குடல் புற்று நோயை குணப்படுத்த உதவுகிறது

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி நீங்க தினமும் சிறிதளவு திராட்சை ரசம் பருகினால் போதும்

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை திராட்சை பழத்திற்கு உண்டு

திராட்சை பழத்தில் இருக்கும் கால்சியம, பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்றவை கீல்வாதம், மூட்டு வீக்கம் போன்றவைகளை குணமாக்க உதவுகின்றன

உலர்ந்த திராட்சையை நன்கு கழுவி சுடு தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து கொள்ளவும் . 

அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் ஆரோக்கியம் மேம்படும்