அஜித்தின் இமயமலை பைக் ரைட்: முழு விவரம் இங்கே

சமீபத்தில் அஜித் குமாரின் பல புகைப்படங்கள் இமய மலை பிரதேசத்தில் இருந்து சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது

அவர் லடாக், மணாலி, உத்தர்காண்ட் என இமய மலையில் உள்ள சில பகுதிகளுக்கு சென்றுள்ளார். 

 அங்கு புத்த கோயில் மற்றும் கார்கில் போர் நினைவிடம் என சில இடங்களுக்கும் சென்றுள்ளார்

இந்நிலையில், அஜித்தின் இந்த பயணத்தை பற்றி நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர்

அதற்கு விடை அளிக்கும் வகையில் அட்வென்சர்ஸ் ரைடர் ஆப் இந்தியாவின் உறுப்பினர் இந்த பயணத்தை பற்றி சமூக வலைதளதில் பதிவிட்டுள்ளார்

அந்த பதிவின் படி நடிகர்கள், அஜித் மற்றும் மஞ்சு வாரியர் அட்வென்சர்ஸ் ரைடர் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து இமயமலைக்கு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துள்ளார்

இந்த இரண்டு வார இமயமலை பயணத்தை சண்டிகரில் இருந்து துவங்கி மணாலி, ஜஸ்பா, சர்ச்சு லே, நுப்ரா பள்ளத்தாக்கு, பன்யோங் முதல் லே, கார்கில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு வரை சென்றுள்ளனர்

அனைவரும் 18000 அடி வரை சவாரி செய்துள்ளனர்

இந்த பயணத்தில் சிலரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

அவர்களுக்கு சுவாசப் பிரச்சனை, மூக்கில் ரத்தம், தலைவலி, காய்ச்சல் மற்றும் சளி இருந்ததுள்ளது. 

ஆனால் அதையும் மீறி பயணத்தை வெற்றியோடு முடித்துள்ளனர்

அஜித் குமார் முழு பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்

இதில் அனைவரும் களைப்புடன் இருக்கும் போதும் கூட, ​​மக்கள் அஜீத்திடம் சென்று படத்திற்காக கேட்பார்கள் எனவும், அவர் அப்போது கூட மிகவும் தாழ்மையுடன் எழுந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார் எனவும் சக பயணிகள் அவரை பற்றி கூறியுள்ளனர்