குஷ்பூ - சுந்தர் சி இருவரும் காதலித்து  மார்ச் 2000 இல் திருமணம் செய்து கொண்டனர். 

ரோஜா - ஆர்.கே.செல்வமணி ஆர்.கே.செல்வமணி ,1992ல் 'செம்பருத்தி' படத்தின் மூலம் ரோஜாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து 7 படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போது காதலித்து 2002 திருமணம் செய்து கொண்டனர்

மணிரத்னம் - சுஹாசினி 1988  - இல்  கல்யாணம் செய்து கொண்டனர் , இவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்

ராஜகுமாரன் - தேவயானி ராஜகுமாரன்  இயக்கிய அணைத்து  படங்களிலும் தேவயானி நடித்துள்ளார். இருவரும் 2001 இல் காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.

சரண்யா- பொன்வண்ணன் நடிகை சரண்யா தனது பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்வண்ணனை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி 2003 இல் தெலுங்கு திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கிருஷ்ண வம்சியை மணந்தார், இவர்களுக்கு ரித்விக்  என்ற மகன் உள்ளார்.

ஹரி- ப்ரிதா இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அட்லீ -பிரியா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் துணை கதாபாத்திரத்தில்  நடித்த நடிகை பிரியாவை ,  இயக்குனர் அட்லீ காதலித்து  2014 இல்  திருமணம் செய்துக்கொண்டார்.

நிரஞ்சனி அகத்தின் - தேசிங் பெரியசாமி தேசிங் பெரியசாமி  இயக்கிய "கண்ணும் கண்ணும்  கொள்ளையடித்தால்" படத்தில் துணை கதாநாயகியாக நிரஞ்சனி அகத்தின் நடித்துள்ளார்.  இருவரும் காதலித்து 2021 இல் திருமணம் செய்துக்கொண்டனர்.

பூர்ணிமா - கே.பாக்யராஜ்  கே.பாக்யராஜ்  தனது முதல் மனைவி இறந்தபிறகு நடிகை பூர்ணிமாவை காதலித்து 1984 இல் திருமணம் செய்துக்கொண்டார்.  விக்னேஷ் சிவன் - நயன்தாரா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர்விக்னேஷ் சிவன் - நயன்தாரா

சோனியா அகர்வால் - செல்வராகவன் இருவரும் காதலித்து 2006 இல் திருமணம் செய்துக்கொண்டனர் , நான்கு வருடங்களே நீடித்த  இவர்களது திருமண வாழ்கை  2010 இல் விவாகரத்து பெற்று முடிவுக்கு வந்தது.

அமலா பால் - AL விஜய்  காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இருவரும்  குறுகிய காலத்திலேயே கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரித்தனர் .

ரேவதி - சுரேஷ் சந்திர மேனன் ரேவதி , புதிய முகம்  இயக்குனரான  சுரேஷ் சந்திர மேனனை 1986 இல் காதலித்து திருமணம் செய்தார். பின்பு கருது வேறுபாடு காரணமாக இருவரும் 2013 இல் விவகாரத்து பெற்றனர் .

சீதா- பார்த்திபன் சீதா, பார்த்திபனை 1990ல்  திருமணம் செய்துக்கொண்டார் ,இருவரும் 2001ல் விவாகரத்து பெற்று பிரித்தனர். இவர்களுக்கு 2 மகள்களும்,1 மகனும் உள்ளனர்.