நயன்தாரா துபாயில் புதிய பிசினஸில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக துபாய் சென்றிருந்தனர்.

நயன்தாரா துபாய்க்கு சென்றது புத்தாண்டை கொண்டாட மட்டுமல்ல, புதிய தொழிலில் முதலீடு செய்வது குறித்து முடிவு எடுக்க துபாய் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு எண்ணெய் நிறுவனத்தில் 100 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா ஏற்கனவே சென்னையை சேர்ந்த சாய் வாலே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

மேலும் தனது தோழியுடன் இனைந்து 'The Lip Balm' எனும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

விக்னேஷ் சிவனுடன் இனைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தியும் நிர்வகித்து வருகிறார் நயன்தாரா.

அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் நயன்தாரா.

ஒரு படத்திற்கு 2.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் நயன்தாரா.

நயன்தாரா சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் விலையுயர்ந்த வீட்டை வாங்கியுள்ளார்.

நயன்தாரா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் நயன்.

நயன்தாரா தற்போது கனெக்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

நயன்தாரா போலவே கீர்த்திசுரேஷும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.