90களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மீனா, இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.

மீனா சென்னையில் பிறந்து வளந்தவர்.

மீனா தனது எட்டாம் வகுப்பை சென்னையில் உள்ள வித்யோதயா பள்ளியில் முடித்தார். தொடர் படவாய்ப்புகளால் கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனது 10 ஆம் வகுப்பை தனியார் பயிற்சியுடன் தேர்ச்சி பெற்றார் மற்றும் 2006 இல் திறந்த பல்கலைக்கழகம் மூலம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் MA(History) பட்டம் பெற்றார்.

1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

'எங்கியோ கேட்ட குரல்' மற்றும் 'அன்புள்ள ரஜினிகாந்த்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் இனைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா , அவ்வை சண்முகி, நாட்டாமை, எஜமான் ஆகிய படங்களுக்காக மீனாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

மீனா, குழந்தை நட்சத்திரமாக 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சேனா திரைப்படத்தில் டி.இம்மனின் இசையில் ''இன்று இந்த காலையில் என் நெஞ்சில்..'' எனும் பாடலுக்கு மீனா பின்னணிப் பாடகியாக இருந்துள்ளார்.

16 வயதினிலே, மற்றும் காதலிசம் ஆகிய இரண்டு பாப் ஆல்பங்கள் மீனா இசையமைத்து பாடியுள்ளார்.

நடிகை மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ம் ஆண்டு திருமணம் நடந்தது.

மீனா வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார், இவர் தனது ஐந்து வயதில் விஜையின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

சேரனின் பொக்கிஷம் படத்தில் பத்மப்ரியா ஜானகிராமனுக்காக மீனா டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

கலை மற்றும் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக மீனாவிற்கு 1998 ஆம் ஆண்டு தமிழக அரசால் 'கலைமாமணி விருது' வழங்கப்பட்டது.

மீனா தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.