ஐஸ்வர்யா ராய் கர்நாடக மாநிலம் மங்களூர்- இல் பிறந்தவர்.

1991 இல்,  நடைபெற்ற  சர்வதேச சூப்பர்மாடல் போட்டியில் வென்றார் ராய் இது வோக்(Vogue) அமெரிக்க பதிப்பில் இடம்பெற்றது.

1993 ஆம் ஆண்டு அமீர் கானுடன் பெப்சி விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி பட்டம் வென்ற பிறகு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

9 ஆம் வகுப்பு படிக்கும் போது கேம்லின் பென்சில் விளம்பரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997 ஆம் ஆண்டு மணி ரத்னத்தின் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், தபு நடித்த  இருவர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இருவர் படத்துக்கு பிறகு இந்தியில் 'அவுர் பியார்ஹோ கயா' படத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் படத்தில் நடித்தார்.

சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் இருவரும் காதலித்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்தனர்.

பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து 2007 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

2003 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை இவரையே சேரும்.

ஐஸ்வர்யா ராய் தற்போது மணி ரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.