Thursday, June 1, 2023
HomeUncategorizedஉங்கள் சருமம் பளபளப்பாக மின்ன வேண்டுமா? அப்போ இதெல்லாம் சாப்பிடுங்க..!

உங்கள் சருமம் பளபளப்பாக மின்ன வேண்டுமா? அப்போ இதெல்லாம் சாப்பிடுங்க..!

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சரும பராமரிப்பில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இதற்காக ஏராளமான கிரீம்கள் மற்றும் சோப்புகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், நாம் கிரீம்கள், சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு பதிலாக ஊட்டச்சத்துகள் நிறைந்த காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வது நமது சருமத்திற்கு நீண்ட ஆரோக்கியத்தை தரும். ஆரோக்கியம் மட்டுமின்றி பளபளப்பையும் அளிக்கும்.

சரும ஆரோக்கியத்திற்கும், பளபளப்பிற்கும் என்னெ்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை கீழே காணலாம்.

கீரை

பல ஊட்டச்சத்துகள் நிறைந்தது கீரை ஆகும். ஏனென்றால் கீரையில் ஏராளமான வைட்டமின்கள் நிரம்பியுள்ளன, கீரைகள் உடல் வலிமைக்கு மட்டுமின்றி சருமத்தை உள்ளே இருந்து ஒளிர வைக்கின்றன. கீரையில் ஃபிளாவனாய்டுகள் போன்ற அழற்சி எதிர்ப்பு சக்தி உள்ளது. கீரையில் சருமத்தில் ஏற்படும் வீக்கம் குறையும். கீரை சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.

வெள்ளரிக்காய்

கோடை காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய காய் வெள்ளரி ஆகும், ஏனென்றால் வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர் உள்ளது. வெள்ளரிக்காய் ஒரு சூப்பர் ஹைட்ரேட்டிங் காய்கறி். சருமத்தை மிருதுவாக வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. முன்கூட்டிய வயதான தோற்றத்திற்கு சருமம் மாறுவதை வெள்ளரிக்காய் தடுக்கிறது. வெள்ளரிகளை சாலட் மற்றும் ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம்.

பீட்ருட்

பீட்ரூட்டிற்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சருமத்தில் தோன்றும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க பீட்ரூட் உதவுகிறது. கல்லீரலை நச்சுத்தன்மையாக்குவதால், தோலிலும் சாதகமான தாக்கத்தை பீட்ரூட் ஏற்படுத்துகிறது. பீட்ரூட்டை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் கிடைக்கும். சருமத்திற்கு ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கும் பீட்ரூட் சாறாக குடிப்பதும் நல்லது ஆகும்.

குடைமிளகாய்

குடைமிளகாய் மூலம் பளபளப்பான தோலைப் பெற முடியும். குடைமிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் அளவு சருமத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குர்செடின் எனப்படும் அழற்சி எதிர்ப்பு கலவை உங்கள் சருமம் வீங்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.

அவகேடோ

ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியது அவகேடோ, சருமத்தை ஈரப்பதமாக்க அவகோடா உதவுகிறது. அவகோடாவில் உள்ள இயற்கை எண்ணெய் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ நிறைந்துள்ள அவகேடோ, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, அவகோடா சருமத்தில் விழும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

மேலே கூறியவற்றை சாப்பிட்டாலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது ஆகும். மேலும், தரமற்ற கிரீம்கள் மற்றும் சோப்புகளை முகத்தில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.

ALSO READ | உங்கள் குழந்தைகள் செல்போனில் நீண்ட நேரம் செலவிடுகிறார்களா? இவ்ளோ ஆபத்து இருக்கா?