இந்திய சந்தையில் குறைந்த விலையில் அசத்தல் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது சியோமி பிரபலனது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் 64 எம்பி மற்றும் 108 எம்பி கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் குறைந்த விலையில் 108 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சியோமி நிறுவனம் எம்ஐ நோட் 10 ஸ்மார்ட்போனை 108 எம்பி கேமரா சென்சாருடன் அறிமுகம் செய்தது.
108 எம்பி கேமரா கொண்ட புதிய சியோமி ஸ்மார்ட்போன்கள் கௌகின் மற்றும் கௌகின் ப்ரோ எனும் குறியீட்டு பெயர்களில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ப்ரோ வேரியண்ட் 108 எம்பி கேமரா கொண்டிருக்கும் என்றும் கௌகின் வேரியண்ட் 64 எம்பி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் விலை குறைந்த 108 எம்பி ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.