பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அக்டோபர் 22 அன்று புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
வாட்ஸ்அப்பின் சமீபத்திய புதுப்பிப்பில், முடக்கு மெனுவில் (‘Mute notifications’) என்றென்றும் (‘Always’) என்ற விருப்பம் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப்.
முன்னதாக நோட்டிபிகேஷனை ம்யூட் செய்ய 8 மணிநேரம், 1 வாரம் மற்றும் 1 ஆண்டு போன்ற விருப்பங்களே இடம் பெற்றிருந்தது. இதில் 1 ஆண்டு என்பதுக்கு பதில் எப்போதும் (‘Always’) என்ற ஆப்ஷனை சேர்த்துள்ளது வாட்ஸ்அப். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக அறிவித்தது.
இந்த புதிய அம்சம் மூலம் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து வரும் நோட்டிபிகேஷனை நிரந்தரமாக ம்யூட் செய்ய முடியும்.
இது தவிர ஷாப்பிங் செய்வதற்கான அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப். இது இந்திய பயனாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.