வாட்ஸ் அப் செயலியில் சமீப காலங்களாக நிறைய வசதிகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் இப்போது மேலும் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வாட்ஸ்அப் நிறுவனம் குரூப்களை நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியும், வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் செய்வதற்கான வசதியும் அறிமுகம் செய்தது.
இலக்கம் முழுவதும் பல பில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புது புது அப்டேட்கள் மூலம் பயனாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்போது வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி மூலம் பிறருக்கு ஒரு வீடியோவை அனுப்பும் முன்பாகவே அதில் இருக்கும் ஆடியோவை மியூட் செய்து அனுப்ப முடியும். வீடியோவை தேர்வு செய்ததும் அதில் இருக்கும் ஆடியோவை மியூட் செய்யும் குறியீடு காண்பிக்கும். அதை பயன்படுத்தினால் வெறும் வீடியோ மட்டுமே மறுபக்கம் இருக்கும் பயனருக்கு சென்று சேரும் அதிலிருக்கும் ஆடியோ மியூட் செய்யப்பட்டிருக்கும். இது மிகவும் பயனுள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சில நேரங்களில் நாம் ஏதேனும் வீடியோவை எடுத்து அதில் இருக்கும் தேவையற்ற சத்தங்கள் காரணமாக பிறருக்கு அனுப்ப முடியாமல் போகலாம், அல்லது அதில் இருக்கும் ஆடியோவை நீக்குவதற்கு அதற்கான எடிட்டிங் ஆப்களை தேடி செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த வசதி மூலம் தேவையற்ற கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படுகிறது. இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவிலேயே புதிய அப்டேட்டில் இந்த மியூட் வசதி இணைக்கப்பட்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்க படுகிறது.
அதேபோல Read Later என்கிற மற்றொரு வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. archive செய்யப்பட்ட சாட்கள் மியூட் செய்யப்படாவிட்டாலும் அவை எப்போதும் archive பகுதியிலேயே இருக்கும் . மேலும் Read Later பிரிவில் எடிட் செய்யக்கூடிய வசதியும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வசதி ஐஓஎஸ் பயனாளர்களுக்கு முதலில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.