உலகில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. தற்சமயம் சமூக இடைவெளியை பின்பற்றுவது சாதாரண விஷயமாகி விட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வீடியோ கான்பரன்சிங் மற்றும் குறுந்தகவல் செயலிகள் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
எனினும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து செய்யும் சில வழக்கங்களை பின்பற்ற முடியாத கவலை அனைவருக்கும் உண்டு. இவற்றில் ஒன்று யூடியூப் வீடியோக்களை ஒன்றாக சேர்ந்து பார்த்து ரசிப்பதை செய்ய முடியாத கவலையில் பெரும்பாலானோர் சிக்கி தவிக்கின்றனர்.
யூடியூப் வீடியோக்களை ஒன்றாக பார்த்து ரசிக்க முடியாமல் இருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? ஏர்டைம் எனும் செயலி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு, வீடியோ பார்க்கும் போது வீடியோ சாட் செய்யும் வசதியை வழங்குகிறது.
மேலும் வீடியோக்களை பாதியில் பாஸ் செய்து, குறிப்பிட்ட காட்சி குறித்த விவாதத்தை வீடியோ சாட் மூலம் மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது. இத்துடன் ரியாக்ஷன்கள், எமோஜிக்கள் மற்றும் குறுந்தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
முதலில் ஏர்டைம் செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை முற்றிலும் இலவசமாக பயன்படுத்த முடியும்.
ஏர்டைம்(Airtime) செயலியை செட்டப் செய்யும் முறை
1. ஏர்டைம் செயலியை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து Get Started பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்
2. மொபைல் நம்பரை பதிவிட்டு ஒடிபி மூலம் வெரிஃபை செய்ய வேண்டும்
3. வெரிஃபை செய்ததும் Create Room ஆப்ஷனை க்ளிக் செய்து மற்ற பயனர்களை ரூமில் சேர்க்க வேண்டும்
4. இனி யூடியூப் ஆப்ஷனை க்ளிக் செய்து வீடியோவை பார்க்க துவங்கலாம்
ஏர்டைம் செயலியை மற்ற வீடியோ காலிங் செயலிகளை செட்டப் செய்வதை போன்றே மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். இதற்கு செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் மற்றவர்களையும் செயலியை இன்ஸ்டால் செய்ய கோர வேண்டும்.
இந்த சேவையை பயன்படுத்தும் வீடியோக்களை ஒன்றாக பார்க்க விரும்பும் அனைவரும் செயலியை இன்ஸ்டால் செய்து வெரிஃபை செய்ய வேண்டும். தற்சமயம் ஏர்டைம் செயலியில் ஒரே சமயத்தில் ஐந்து பேருடன் உரையாட முடியும்.
எப்படி பார்க்க துவங்க வேண்டும்?
வீடியோவை பார்க்க ரூமில் உள்ள அனைவரையும் வீடியோ கால் மேற்கொள்ள செய்ய வேண்டும். இதற்கு ரூமை திறந்து அதில் உள்ள கை ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். அனைவரும் அழைப்பில் இணைந்ததும் பார்க்க விரும்பும் வீடியோவை பார்க்க பாப்கான் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். தேர்வு செய்ததும், போஸ்ட் டூ ரூம் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.