பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் புதிய அம்சத்தை வழங்கி உள்ளது. இதை கொண்டு பயனர்கள் வீடியோ கால் பேசும் போது தங்களது ஸ்கிரீனை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவருடன் வீடியோ கால் பேசுவோர் இனி தங்களின் ஸ்கிரீன்களை பகிர்ந்து கொள்ளலாம்.
பேஸ்புக் மெசஞ்சரில் புதிய ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பேஸ்புக் மெசஞ்சர் சேவையில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் முதற்கட்டமாக எட்டு பேருடன் வீடியோ கால் பேசும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த அம்சத்தை வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும் போதே இயக்க முடியும். இதை பயன்படுத்த அப்டேட் செய்யப்பட்ட மெசஞ்சர் செயலி, சீரான இணைய இணைப்பு மற்றும் பேஸ்புக் லாக் இன் விவரங்கள் அவசியம்.
1 – ஸ்மார்ட்போனில் உள்ள பேஸ்புக் மெசஞ்சர் செயலியை திறக்கவும்
2 – மெசஞ்சர் செயலியில் பேஸ்புக் லாக் இன் விவரங்களை கொண்டு லாக் இன் செய்யவும்
3 – வீடியோ கால் மேற்கொள்ள துவங்க வேண்டும்
4 – இனி கீழ்புறம் உள்ள பாட்டம் பேனலை மேல்புறமாக ஸ்வைப் செய்தால் வீடியோ கால் கண்ட்ரோல்களை பார்க்க முடியும்
5 – வீடியோ கால் கண்ட்ரோல்களில் ஷேர் யுவர் ஸ்கிரீன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
6 – அடுத்து வரும் பாப் அப் ஸ்கிரீனில் ஸ்டார்ட் நௌ பட்டனை க்ளிக் செய்யவும்
7 – இவ்வாறு செய்ததும் உங்களது ஸ்கிரீன் மற்றவர்களுடன் ஷேர் ஆக துவங்கிவிடும்