Saturday, March 25, 2023
HomeTechnologyTech Newsரூ. 6499 விலையில் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரூ. 6499 விலையில் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன் ஸ்பார்க் கோ 2020 என அழைக்கப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 மாடலில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 சிறப்பம்சங்கள்

  • 6.52 இன்ச் 1500×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர்
  • 2 ஜிபி ரேம்
  • 32 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஹைஒஎஸ் 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, டூயல் எல்இடி ஃபிளாஷ்
  • இரண்டாவது ஏஐ லென்ஸ்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
  • பின்புறம் கைரேகை சென்சார்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
  • மைக்ரோ யுஎஸ்பி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் கோ எடிஷன் ஐஸ் ஜாடைட் மற்றும் அக்வா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.