Monday, September 27, 2021
Home Technology Tech News மனநல பிரச்சினைகளை கண்டறியும் குட்டி சாதனம் கண்டுபிடிப்பு- அசத்திய ஆய்வாளர்கள்!

மனநல பிரச்சினைகளை கண்டறியும் குட்டி சாதனம் கண்டுபிடிப்பு- அசத்திய ஆய்வாளர்கள்!

ஆல்பபெட் நிறுவனத்தின் ஆய்வு குழுவான எக்ஸ், மனித மூளையை மாணிட்டர் செய்யும் சிறிய ரக சாதனத்தை உருவாக்கி உள்ளது. இதை கொண்டு நாளடைவில் மக்களின் மனநல பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என இந்த ஆய்வு குழு அறிவித்து இருக்கிறது.

ஆய்வு பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், எக்ஸ் குழுவினர் தங்களது கண்டுபிடிப்பை மனநல ஆரோக்கிய துறைக்கு இலவசமாக வழங்குகிறது.

இஇஜி (Electroencephalogy) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மூளையில் நடைபெற மின்சார நடவடிக்கைகளை கணக்கிட முடியும். பின் இந்த சாதனம் தகவல்களை சேகரித்து மாற்றம் செய்ய உதவுகிறது. மேலும் இதை கொண்டு மன அழுத்தத்தை கணக்கிட முடியும்.

Also Read: பார்க்க முகக்கவசம் ஆனால் ஏர் பியூரிஃபையர்- அசத்தலான சாதனத்தை அறிமுகம் செய்த எல்ஜி

இந்த சாதனத்தின் ப்ரோடோடைப் தலையில் நீச்சல் தொப்பி போன்று பொருந்தி கொள்கிறது. இதனை நரம்பியல் வல்லுநர்கள், வன்பொருள், மென்பொருள் மற்றும் திட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றிணைந்து உருவாக்கி இருக்கிறது. இந்த குழு எக்ஸ் பிராஜக்ட் ஆம்பரில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருகிறது.

மூளையின் நடவடிக்கைகளை இஇஜி கொண்டு கணக்கிட விளையாட்டு சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பின் இந்த சாதனம் விளையாட்டுகளில் வெற்றி பெற்றது. இதே முறையை மன அழுத்தம் கொண்டவர்கள் மற்றும் மன அழுத்தம் இல்லாதவர்களிடையே பயன்படுத்தப்பட்டது.

இந்த தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பல்வேறு மருத்துவர்கள் முன்வருவதாக ஆய்வு குழுவை சேர்ந்த பெல்டன் தெரிவித்து இருக்கிறார். இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் யார் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர் என்பதை கணிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments